Advertisement

டெல்லியில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவு மழைப்பொழிவு

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. ஒரே நாளில் டெல்லியில் 11.21 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
 
செப்டம்பர் மாதத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகபட்ச மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக முனிர்கா, சப்தர்ஜங், மயூர் விஹார் , நேரு பிளேஸ், கரோல் பாக் என நகரின் முக்கிய இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்தது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
 
image
அடுத்த சில தினங்களுக்கு டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்யும் என எச்சரித்துள்ள வானிலை மையம், பகல் நேரத்தில் மழைப்பொழிவு அதிக அளவில் இருக்கும் என தெரிவித்துள்ளது.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments