Advertisement

ஒலிம்பிக்: இந்திய வீராங்கனை பங்கேற்றுள்ள கோல்ஃப் போட்டி மழையால் நிறுத்தம்

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் அதிதி அஷோக் பங்கேற்றுள்ள மகளிருக்கான தனிநபர் கோல்ஃப் போட்டி மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
 
ஒலிம்பிக் தொடரின் கோல்ஃப் ரவுண்டு 4-வது ஆட்டங்கள் தற்போது நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் அதிதி அசோக், கோல்ஃப் போட்டியில் மூன்று பதக்கங்களில் ஏதாவது ஒன்று வாங்க வாய்ப்பு உள்ளது. முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பதால் அதிதி அசோக் பதக்கம் வாங்க அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
 
இந்த நிலையில், அதிதி அஷோக் பங்கேற்றுள்ள கோல்ஃப் போட்டி மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments