Advertisement

இலங்கை தமிழர்களுக்கான முகாம்கள் இனி மறுவாழ்வு முகாம்கள்- ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான முகாம்கள் இனி மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நேற்று இலங்கை தமிழர்நலனுக்காக ரூ.317 கோடிரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது, தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான முகாம்கள் இனி மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேரவையில் பேசிய ஸ்டாலின், ''இலங்கை தமிழருக்கு நாம் எப்போதும் உறுதுணையாக இருப்போம். இனி இலங்கை தமிழர்களுக்கான முகாம்கள் என அழைக்காமல் மறுவாழ்வு முகாம்கள் என அழைப்போம்; அவர்கள் அகதிகள் இல்லை, நாமிருக்கிறோம்.'' என்று தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments