Advertisement

“பெரியாரின் கனவை நிறைவேற்றிய மு.க.ஸ்டாலின்” - திருமாவளவன் புகழாரம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் எனும் பெரியாரின் எண்ணத்தை தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளார்.

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவையொட்டி அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த மதுரை விமானநிலையம் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். 

image

அப்போது பேசிய அவர், “பெகாசஸ் விவகாரம் குறித்து பாஜக அரசு விளக்கம் கொடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்ததாலும், மோடி தலைமையிலான அரசின் பிடிவாதத்தாலும் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. தமிழக பட்ஜெட்டில் தொலை நோக்கு பார்வை இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிருப்பது வேடிக்கையாக உள்ளது. 

தமிழக அரசு பெட்ரோல் விலையில் 3 ருபாய் குறைத்திருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கக் கூடிய அளவில் இருக்கிறது. 

வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது பாராட்டப்பட வேண்டியதொன்று. அனைத்து தரப்பு மக்களும் அர்ச்சகராக வேண்டும் எனும் பெரியாரின் எண்ணத்தை தற்போதைய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் நிறைவேற்றியிருப்பது பாராட்டும்படியான செயல்” எனக் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments