Advertisement

ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு தகுதி

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா.
 
ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இன்று காலை நடைபெற்ற மல்யுத்த போட்டியின் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா, ஈரானிய வீரர் மோர்டஸாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.  காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிர்கிஸ்தான் நாட்டு வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், தற்போது அரையிறுதிக்கு முன்னேறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments