
டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தியா - ஜெர்மனி அணிகள் இடையிலான வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 5 கோல்கள் அடித்து முன்னிலை வகிக்கிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆடவர் ஹாக்கி போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - ஜெர்மனி அணிகள் மோதி வருகின்றன. மிகவும் பரபரப்பாக தொடங்கிய இந்தப் போட்டியில் முதல் 2 ஆவது நிமிடத்திலேயே ஜெர்மனி அணி கோல் அடித்து முன்னணி வகித்தது. முதல் கால் ஆட்டத்தில் இந்தியாவுக்கு ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்து. ஆனால் இந்தியாவால் முதல் கோலை பதிவு செய்ய முடியவில்லை.

ஆனால் இரண்டாம் கால் ஆட்டத்தில் தனி ஒருவனாக பந்தை விரட்டிச் சென்ற இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர் இந்தியாவுக்கான முதல் கோலை பதிவு செய்தார். ஆனால் அதன் பின்பு ஜெர்மனி 2 கோல்களை அடுத்தடுத்து விளாசி அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் மனம் தளராத இந்திய வீரர்கள் அடுத்து கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை கோலாக்கினார். பின்பு இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் இந்தியாவுக்கான 3-ஆவது கோலை பதிவு செய்தார்.

இதனையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா 3, ஜெர்மனி 3 கோல் என சமநிலையில் இருந்தது. முதல் பாதி முடிவடைந்ததும் இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். இதில் ருபிந்தர் சிங் பால் அற்புதமான கோலை பதிவு செய்தார். இதனையடுத்து ஜெர்மனி வீரர் செய்த தவறால் இந்தியாவுக்கு பெனால்ட்டி ஸ்டோக் வாய்ப்பு கிடைத்து. இதனை சிம்ரன்ஜீத் கவுர் எதிர்கொண்டு 5 ஆவது கோல் அடித்தார். இதனால் 3-ஆவது கால் ஆட்டத்தில் இந்தியா 5, ஜெர்மனி 3 கோல்கள் என அடித்துள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments