Advertisement

"பலம் கூட்டியது பாலுறவு"- ஒலிம்பிக்கில் 3 தங்கங்களை அள்ளிய ரஷ்ய நீச்சல் வீராங்கனை பகிர்வு

பாலுறவு கொள்வதன் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு அதீத சக்தி கிடைப்பதாக மருத்துவ உலகம் நம்புகிறது என்று ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் நீச்சல் பிரிவில் மூன்று தங்கம் பதக்கம் வென்ற ரஷ்ய வீராங்கணை அல்லா சிஷ்கினா தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் இருந்து வெளியாகும் 'ஸ்போர்ட் எக்ஸ்பிரஸ்' ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள அல்லா சிஷ்கினா "நான் எப்போதும் மருத்துவ ஆராய்ச்சிகளை பெரிதும் நம்பி இருப்பேன். நான் என்னுடைய மருத்துவரான டெனிசிடம் கலந்தாலோசித்தேன். அதன்படி அறிவியல் சமூகம் என்ன சொல்கிறது என்றால் உங்களுக்கு அதீத சக்தி வேண்டுமென்றால் நீங்கள் பாலுறவு கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுக்கு நீண்ட நேர வேலை இருந்தால் தினமும் சராசரியான வேலை சூழல் இருந்தால், அப்போது பாலுறவு தேவைப்படாது. இந்த விஷயம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்" என்றார் அல்லா சிஷ்கினா.

image

மேலும் பேசிய அவர் "பாலுறவு கொள்வது என்பது அவரவர் விருப்பம். பாலுறவுக்கொள்வதன் மூலம் அதற்கான பலன் உங்களுக்கு கிடைக்கும் என்றால் அதனை நீங்கள் மேற்கொள்ளலாம். முக்கியமாக விளையாட்டு வீரர்களுக்கு பாலுறவு நல்ல பலனை கொடுக்கும். பாலுறவு மூலம் டெஸ்டோஸ்ட்ரோன் (testosterone) ஹார்மோன் செயல்பாடுகள் அதிகரிக்கும். அதனால் விளையாட்டு வீரர்களின் தேவையற்ற ஆக்ரோஷம் கட்டுப்படுத்தப்படும். தசை வலிமையை மட்டுமே நம்பி விளையாடப்படும் போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்கள் முழுவதும் உச்சம் தொடாத பாலுறவை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் போட்டியில் நல்ல முடிவு கிடைக்கும்" என்றார் அல்லா சிஷ்கினா

image

நீச்சல் வீராங்கனைகளின் உடலமைப்பு குறித்து பேசிய அவர் "ஒவ்வொரு நீச்சல் வீராங்கணைகளுக்கும் வித்தியாசமான உடலமைப்பு இருக்கும். பெரிய மார்பகங்கள் இருக்கும் வீராங்கனைகளால் தண்ணீரில் எளிதாக மிதக்க முடியும், போட்டிகளிலும் எளிதாக ஜெயிக்க முடியும் என்ற எழுதப்படாத கூற்றுகள் இருக்கிறது. ஆனால் உண்மையில் பெரிய மார்பகங்களை வைத்துக்கொண்டு நீச்சல் பயிற்சியை மேற்கொள்வதே சிரமம். இதனால் பல வீராங்கனைகள் மார்பக அறுவைச் சிகிச்சை செய்துக்கொள்கின்றனர். இது மிகவும் செலவுமிக்கது மற்றும் ஆபத்தானதும் கூட" என்றார் அல்லா சிஷ்கினா.

image

32 வயதான ரஷ்ய நீச்சல் வீராங்கனை அல்லா சிஷ்கினா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். இதற்கு முன்பு ரியோவில் 2016 இல் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும், 2012 இல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் நீச்சல் பிரிவில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments