
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரிட்டனுக்கு எதிரான வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்தது இந்திய மகளிர் அணி.
ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய மற்றும் பிரிட்டன் விளையாடி வருகின்றன. முதல் கால்பகுதியில் இரு அணிகளும் தீவிரமாக கோல் அடிக்க முயற்சித்தன. இந்திய பெண்கள் அணியின் கீப்பர் சவிதா புனியா சிறப்பாக செயல்பட்டு பிரிட்டன் வீராங்கனைகளின் முயற்சிகளை தடுத்தார். முதல் 15 நிமிடங்களில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை.
இந்த நிலையில்தான் இரண்டாவது கால் பகுதி விறுவிறுப்பாக நடைபெற்றது. பிரிட்டன் அணிக்கு முதல் கோல் வாய்ப்பாக சேம் சைட் கோல் ஆக கிடைத்தது. இந்திய வீராங்கனை செய்த தவறால் அவர்களுக்கு ஒரு கோல் கிடைத்தது. அடுத்ததாக தங்களுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தி கோல் அடித்து அசத்தினர் பிரிட்டன் வீராங்கனைகள். இதனால், பிரிட்டன் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இதனையடுத்து இரண்டாவது கால்பகுதியின் பிற்பகுதியில் இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தின. அடுத்தடுத்து இரண்டு பெனால்டி கோல்களை அடித்து அசத்தினர். அதனை தொடர்ந்து மூன்றாவதாக சூப்பர் ஷாட் மூலம் கோல் ஒன்றினையும் அடித்தனர். இரண்டாவது கால் பகுதியின் முடிவில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 Comments