Advertisement

15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கம் - தமிழக அரசு

தமிழ்நாடு காவல்துறையின் 15 அதிகாரிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் பொதுமக்களுக்கு தன்னலம் பாராமல் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்களை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

அதன்படி, 5 காவல் அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படவுள்ளது. அமரேஷ் புஜாரி, அமல்ராஜ், விமலா, நாவுக்கரசன், பிரேம் பிரசாத் ஆகியோருக்கு இந்த பதக்கம் வழக்கப்படவிருக்கிறது. காவல் புலன் விசாரணைக்கான சிறப்பு பதக்கங்கள் 10 அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு சுதந்திர தின கொடியேற்ற விழாவில் முதல்வர் பதக்கங்களை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments