Advertisement

ஒலிம்பிக் வில்வித்தை: இந்தியாவின் அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக்கின் வில்வித்தை பிரிவில் இந்தியாவின் அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிப்பெற்றார்.

முன்னதாக ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் வில்வித்தை முதல் சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் அதானு தாஸ் சீன தைபே வீரரான ஒய் சி டெங்கை எதிர்கொண்டார். இதில் அபாரபான திறமையை வெளிப்படுத்திய அதானுதாஸ் 6-4 என்ற கணக்கில் டெங்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதனையடுத்து அடுத்த சுற்று ஆட்டத்தில் அதானுதாஸ், தென் கொரிய வீரரான ஓ ஜின் ஹெய்க்கை எதிர்கொண்டார்.

image

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் அதானு தாஸ்க்கு கடுமையான போட்டியாக விளங்கினார் ஜின் ஹெய்க். இதில் 6-5 என்ற புள்ளி கணக்கில் அதானு தாஸ் சிறப்பான வெற்றிப்பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிப் பெற்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments