Advertisement

டிசம்பருக்குள் 65 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம்

வரும் டிசம்பர் மாதம் வரை 65.5 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தத்தை இறுதி செய்திருக்கிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்களை மத்திய அரசு இறுதி செய்துள்ளது.  இதன் மூலமாக கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.205க்கும், கோவாக்சின் தடுப்பூசி ரூ.215 க்கும் கொள்முதல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சீரம் நிறுவனத்திடம் 37 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளையும், பாரத் பயோடெக்கிடம் 28.5 கோடி கோவாக்ஸின் தடுப்பூசிகளையும் பெற ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது பல மாநிலங்களில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில், இந்த ஒப்பந்தம் மூலமாக கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதனால் வரும் டிசம்பருக்கும் நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தும் பணியை நிறைவு செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments