Advertisement

"சென்னையில் 2-ஆவது விமான நிலையம் அமைக்க தமிழக அரசு இடம் இறுதி செய்யவில்லை" - மத்திய அரசு

சென்னைக்கு அருகே இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை இன்னும் தமிழக அரசு இறுதி செய்யவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. சென்னைக்கு அருகே 20 கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான கோரிக்கையை மாநில அரசு வழங்கியதாக கூறப்பட்டுள்ளது.

image

இதற்கான தரவுகளை இறுதி செய்து 2011-ஆம் ஆண்டு தமிழக அரசிடம் வழங்கியதாகவும் ஆனால் நிலத்தை ஒப்படைப்பதற்கான இறுதிக்கட்ட அனுமதியை இன்னும் மாநில அரசு வழங்கவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தவிர சென்னைக்கு அருகில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை தேர்ந்தெடுக்க மாநில அரசிடம் கோரிக்கை வைத்ததாகவும் அதன்படி மாமண்டூர் மற்றும் பரந்தூர் ஆகிய இடங்களை 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பரிந்துரைகளாக மாநில அரசு வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் ஒன்றை தமிழக அரசு இறுதி செய்யவில்லை என்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments