Advertisement

குஜராத்தில் 26-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து வரும் 26-ஆம் தேதியில் இருந்து 9 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

50 சதவிகித இருக்கைகளுடன் பள்ளிகள் இயங்கலாம் என்றும், நேரடி வகுப்புகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், பெற்றோரின் சம்மதம் பெற்று வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் ராஜஸ்தான் மாநில அரசும் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments