Advertisement

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து இறங்குமுகம்; புதிதாக 1,86,364 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 1,86,364 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,59,459 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவியது. தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும்  2 லட்சத்து 59 ஆயிரத்து 459 பேர் குணமடைந்துள்ளனர். 3,660 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது கொரோனா பாதிப்புடன் 23 லட்சத்து 43 ஆயிரத்து 152 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று வரையில் 20 கோடியே 57 லட்சத்து 20 ஆயிரத்து 660 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.   

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

0 Comments